இரண்டாம் ஏதெனியன் கூட்டணி என்பது ஏஜியன் நகர அரசுகளின் கடல்சார் கூட்டமைப்பு ஆகும். இது கிமு 378 முதல் 355 வரை ஏதென்சின் தலைமையில் செயல்பட்டது. இதன் முதன்மை நோக்கம் எசுபார்த்தா எதிர்ப்பு அடுத்து பாரசீகப் பேரரசின் வளர்ச்சிக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை ஆகும்...மேலும்
1869– பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் விக்டோரிய பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் ஆத்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் திருடப்பட்ட தலைமுறைகளுக்கு வழிவகுத்தது.
பிரபல தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் தேவா தனது 75-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.
2026 அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்கத் தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அமைதி, மற்றும் பன்னாட்டுச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது.
பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும்.
அரச பயங்கரவாதம் எனும் சொல் ஓர் அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம். 1930-களில் இது உருவாக்கப்பட்டது.
பயனர்:Uksharma3பயனர்:Uksharma3 (எஸ். எஸ். உமாகாந்தன்) சென்னையைச் சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துள்ளார். பள்ளிக் கல்வியை இலங்கை யாழ்ப்பாணத்திலும், பட்டப்படிப்பை 1964 ஆம் ஆண்டில் திருச்சியிலும் பெற்றார். இலங்கை அஞ்சல் துறையில் வானொலித் தந்தியாளராக பணியாற்றினார். கொழும்பு நகரில் ஊடகத்துறை பயிற்சி பெற்று இலங்கை தமிழ்/ஆங்கில பத்திரிகைகள், தமிழக இதழ்கள், இலங்கை வானொலி, சென்னை வானொலி, வெளிநாட்டுத் தமிழ்/ஆங்கில வானொலி ஒலிபரப்புகளிலும் பங்களிப்புகள் செய்துள்ளார். தமிழ் ஒலி என்ற வானொலி ஒலிபரப்புகள் தொடர்பான இதழை 1980களில் வெளியிட்டார். நெதர்லாந்து வானொலியின் ஆங்கில ஒலிபரப்பு 1990 ஆம் ஆண்டு நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். ஜெர்மன் வானொலியின் ஒலிபரப்பு அலைவரிசைக் கண்காணிப்பாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக செஞ்சிலுவை கமிட்டியில் (ஐ.சி.ஆர்.சி) பரப்புரை செயலாளர், ஊடக தொடர்பாளர், தமிழ்⇔ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணிகளில் 10 ஆண்டுகள் பல்வேறு நகரங்களில் பணியாற்றினார். பின்னர் வலைதளங்கள் வடிவமைக்கும் பயிற்சி பெற்று 7 ஆண்டுகள் வலைதள வியாபாரம் செய்து வந்தார். 2012 ஆம் ஆண்டு எல்லாப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றபின் தமிழ்/ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார்.
பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,91,965 கட்டுரைகள் உள்ளன.மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.